Diploma in Commercial Art (D.C.A.) -- [கமர்ஷியல் ஆர்ட் பயிற்சி்]

சிலருக்கு இயற்கையிலேயே அற்புதமாக வரையும் திறமை இருக்கும். ஆனால் போதிய கல்வித்தகுதி இருக்காது. அவர்களது திறமையும் வீணாகி விடக்கூடாது என்பதற்காக கமர்ஷியல் ஆர்ட் பயிற்சியும் அளிக்கிறோம். இப்பயிற்சியில் சேர படிப்பு எதுவும் தேவையில்லை. தமிழ் எழுத , படிக்க தெரிந்தால் போதும். ஓவிய கலையின் இந்தப் பிரிவு ஒரு அமுதசுரபியாகும். தினமும் பணம் புரளும் சொந்தத் தொழில் நடத்தலாம். விளம்பர போர்டுகள் எழுதுவது, சினிமா சிலைடுகள் தயாரித்தல், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் எழுதுதல், ஸ்டென்சில் விளம்பரங்கள், புத்தக அட்டைப் படம் வரைதல், சார்ட்டுகள், வாழ்த்து மடல்கள் வரைதல், ஆயில் பெயிண்டிங், போஸ்டர் கலர் வேலைகள், புகைப்படத்திற்கு வண்ணம் தீட்டுதல், கமர்ஷியல் டிசைன்கள். இன்றைய நவீன தொழில் நுட்ப வரவான கம்ப்யூட்டர் பயன்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக பாடங்களாடு பலவிதமான எழுத்துக்கள் எழுதும் முறை மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை வரைதல், வண்ணக் கலவை ( கலர் மிக்ஸிங் ) , தொழில் நடத்தும் முறை, ஆர்டர்கள் சேகரிப்பது போன்ற பல பாடங்கள் ஏராளமான படங்களாடும், வண்ணப் படங்களாடும் அனுப்பப்படும்.
பயிற்சிக் காலம் ஆறு மாதங்கள். மூன்று மாதகாலப் பயிற்சியும் உண்டு. கமர்ஷியல் ஆர்ட் பிரிவில் நேர்முகப் பயிற்சி இல்லை. அஞ்சல் வழிப்பயிற்சி மட்டுமே உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விருப்பத்திற்கேற்ப ஆறு மாதத்திற்கொருமுறை ஐந்து நாட்கள் சிறப்பு நேர்முக வகுப்புகள் நடக்கும். இதற்கு தனிக் கட்டணம் உண்டு. இது பற்றிய விவரங்கள் பாடத்தோடு அனுப்பி வைக்கப்படும். நமது பயிற்சியில் முக்கியமான சிறப்பம்சமே படங்கள வரைந்து அனுப்புவதும், அதை திருத்தி, திருப்பியனுப்பும் முறையும் தான். ஒவ்வொரு பாடத்தோடும் இணைக்கப்பட்டுள்ள வரைந்து அனுப்பவேண்டிய படங்களத் தவறாமல் வரைந்தனுப்பும் மாணவர்கள் மட்டுமே சிறப்பு நேர்முக வகுப்புக்கு அழைக்கப்படுவர்.

பயிற்சிக் கட்டணம்

இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 2000/ ஆகும். மொத்தமாக செலுத்த விரும்பினால் ரூ. 1500/ செலுத்தினால் போதும். அல்லது மூன்று தவணைகளில் ரூ.700/ + ரூ. 650/ + ரூ. 650/ என்றும் செலுத்தலாம். முதலிலேயே முழுவதுமாக செலுத்துவோர் மூன்று மாத கால பயிற்சியிலும் தவணை முறையில் செலுத்துவோர் 6 மாத கால பயிற்சியிலும் சேர்த்துக் கொள்ளப்படுவர். டிப்ளமா சான்றிதழ் கட்டணம் ரூ. 100/ தனி.

வளர்ந்து வரும் கமர்ஷியல் ஆர்ட்

இன்று அறிவியலும் தொழில் நுட்பமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. நாள்தோறும் புதிய புதிய பாடங்கள் தோன்றுகின்றன. எல்லாப் பாடங்களயும் போதிப்பதற்கு ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன.

ஆனால் ஓவியத் துறை பொறுத்த வரைக்கும் ஓவியக்கலையை முறையாக கற்றுத்தர போதிய கலைக்கூடங்கள் இல்லை என்றால் அது மிகையாகாது. அரசாங்கமே நடத்தும் ஒன்றிரண்டு ஓவியப் பள்ளிகளிலும் நுழைவுத் தேர்வுகள், சிபாரிசுகள் இன்னும் என்னென்னவோ நடக்கின்றன. சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையோ மிகக் குறைவு. பயிற்சிக் காலமோ பல ஆண்டுகள். கட்டணமோ பல ஆயிரங்கள். ஓவியக் கலையையே முழுநேரத் தொழிலாகக் கொள்ள விரும்பி ஆர்வத்தோடு ஓவியம் பயில விரும்பும் மாணவர்களுக்கு எது தேவையோ அதைச் சொல்லித் தர எவரும் முன் வரவில்லை. ஆனால் , நாட்டில் ஓவியர்களின் தேவையோ மிக அதிகமாக உள்ளது.

கமர்ஷியல் ஆர்ட் ஒரு தொழில் பயற்சி

இந்தச் சூழ்நிலையில்தான் நாங்கள் பிராக்டிகலாகச் சிந்தித்து வேலை வாய்ப்பிற்குப் பயன்படும் வகையிலும், வாழ்க்கையை நடத்தும் தொழிலாகப் பயன்படும் வகையிலும், ஓவியக் கலையைப் பல பிரிவுகளாகப் பிரித்து எங்கள் பாடத்திட்டங்கள அமைத்தோம். இந்தப் பாடத்திட்டங்கள அமைக்க ஆராய்ச்சி அடிப்படையில் நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியும், மெய்வருத்தம் பாராத உழைப்பும் அளவிட முடியாதவை. ஆரம்பத்தில் முதலாண்டில் ஓவியத் துறையின் வேலை வாய்ப்பிற்குரிய படிப்பாக நாங்கள் ஓவிய ஆசிரியர் பயிற்சியைத் தொடங்கிய போது. தபாலில் ஓவியம் கற்றுத் தர முடியுமா? அதுவும் அரசாங்கத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க முடியுமா? வெற்றி கிடைக்குமா? இது வீண் வேலை! என்றெல்லாம் எங்களுக்கு வேண்டிய ஓவியர்கள கேலி பேசினர்.

ஆனால் எங்களின் அற்புதமான அஞ்சல் வழிப் பயிற்சியினாலும், திருத்தி அனுப்பும் முறையினாலும் மாணவர்களின் நல்ல ஒத்துழைப்பினாலும் கணிசமான சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் பலர் இப்போது பணியாற்றுகின்றனர். ( வெற்றி பெறாதவர்களில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், எங்கள் முறைப்படி படம் வரைந்து அனுப்பாதவர்கள் ஆகியோரும் அடங்குவர் ) .

படிக்காதவர்களும் பயிற்சி பெறலாம்

அதே போல் போதிய கல்வித் தகுதி இல்லாவிட்டாலும், ஓவியத்தில் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையிலும் கமர்ஷியல் ஆர்ட் பிரிவின் பாடத்திட்டத்தை அமைத்தோம். கடந்த ஆண்டுகளில் இப்பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் தனியாக தொழில் தொடங்கி இன்று சிறந்த ஓவியர்களாகி பணமும் புகழும் சம்பாதிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மைசூர், பெங்களூர், மும்பாய், டெல்லி, அந்தமான், சிங்கப்பூர், மலேசியா, புருனே மற்றும் வளகுடா நாடுகள் போன்ற இடங்களிலும் நமது மாணவர்கள் தரமான கமர்ஷியல் ஆர்டிஸ்டுகளாக சக்கைப்போடு போடுகின்றனர் என்பதைப் பெருமையோடு தெரிவிக்கிறோம்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டியது எங்கள் கடமை. ஏற்கனவே ஓரளவு வரையத் தெரிந்தவர்களும், ஓவியக் கலையில் மிக அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்கள இப்பயிற்சியில் சேர்வது நல்லது. இனிமேல்தான் ஓவியம் வரையவே கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரிவு ஏற்றதல்ல. அவர்கள் ஓவிய நுண்கலை பயிற்சியில் சேருவது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஓரளவு வரையத் தெரிந்தவர்களாக இருந்தால், இந்தப் பிரிவில் கற்றுத் தரும் பாடங்களயும், எழுத்துக்கள் எழுதும் முறையையும் விரைவில் கற்றுக் கொண்டு, உடனே கமர்ஷியல் ஆர்ட் தொழில் தொடங்கலாம். கமர்ஷியல் ஆர்ட் பிரிவின் பாடத்திட்டம் பற்றியப் பொதுவான விவரங்களத் தெரிந்து கொள்ளுங்கள்.

செயல்முறைகேற்ற நுட்பமான பாடங்கள்

போர்டு செய்யத் தேவையான மரச்சட்டங்கள், தகரம், ஆணி, பிரைமர் போன்றவைப் பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் யாருடைய தயவும் இன்றி, நமது பயிற்சியை முடித்த பிறகு, உடனே தொழில் தொடங்கலாம். இதுபோலவே பேனர்கள் எழுதுதல், சுவர் விளம்பரங்கள் எழுதுதல். சினிமா சிலைடுகள், டிஜிட்டல் பிரிண்டிங், ஃபிளக்ஸ் போர்டுகள் தயாரித்தல் போன்றவைகளப் பற்றியெல்லாம் ஒளிவு மறைவின்றி, தொழில் ரகசியங்களயும் ஒன்றுவிடாமல் பாடங்களில் விளக்கியுள்ளாம்.

எழுத்துக்கள் எழுதும் முறை

எங்கள் பாடங்களில் உள்ள எழுத்து முறைகள மட்டுமே பயன்படுத்தி, ஆரம்பத்தில் உங்கள் தொழிலை வெற்றிகரமாகச் செய்ய முடியும். அந்த அளவுக்கு அதிகமான எழுத்து முறைகள் பாடங்களில் உள்ளன. இப்படியே எங்கள் கமர்ஷியல் ஆர்ட் பாடங்களின் சிறப்புக்களச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே உடனே இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைய வேண்டுகிறோம். யோசித்து யோசித்து காலம் கடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. காலம் பொன் போன்றது. போனால் வராது. இது விளம்பர யுகம். கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டுகள் இல்லாமல் எதுவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது உங்கள் நிலைமை என்ன என்பதை உடனே சிந்தித்துச் செயல்படுங்கள்.

கம்ப்யூட்டரும் கமர்ஷியல் ஆர்ட் பிரிவும்

இன்றைக்கு கம்ப்யூட்டரின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது, ஓவியத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், கணிப்பொறியினால் ஓவியர்களுக்கு வேலையே இல்லை என்பது போன்ற பொய்த் தோற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் கம்ப்யூட்டர் ஓவியர்களுக்குப் பல வசதிகளச் செய்து கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை. நீங்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

இந்தப் பயிற்சியிலேயே ஸ்டிக்கர் கட்டிங், வினைல் போர்டுகள், பிளக்ஸ் டிஜிட்டல் பிரிண்டிங், கிராபிக்ஸ் போன்ற ஆர்டர்கள நீங்கள செய்வதற்குத் தெளிவாக வழிகாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியின் முடிவில் தகுதி வாய்ந்தோருக்கு Diploma in Commercial Art என்ற அழகியச் சான்றிதழ் வழங்கப்படும். தனிக் கட்டணம் ரூ. 100/ ஆகும்.ி

 

 

More Details